ஸாதா⁴வயா ப⁴க்தீகாஜ | நாஹீம்ʼ லாஜ த⁴ரீத ||

ராம்கிருஷ்ணஹரி. ‘ ப்ரேமை’ ஏன் உயர்ந்தது? ஏனெனில்… அ.) தூய ‘ ப்ரேமை ’ யில் எந்தச் செயலைச் செய்தாலும் அது எதையும் எதிர்பாராமல் இருக்கும். ‘ப்ரேமை’ பிறருக்குக் கொடுப்பதை மட்டுமே விரும்பும். ஒருவர் வைத்திருப்பது மிகவும் சொல்பமானதாக இருந்தாலும் அதைக் கொடுக்க ஒரு பெரிய இதயம் தேவை. ஆ.) தூய ‘ ப்ரேமை ’ யில், ஒருவர் தன்னைவிட மற்றவரையே முன்னிலைப்படுத்துகிறார். ஒரு ‘ப்ரேமி’ மற்றவருக்காகவே தனது வாழ்க்கையை வாழ்கிறார். அவரது ஒவ்வொரு செயலும் மற்றவரின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காகவே செயல்படுத்தப்படுகிறது. c.) தூய ‘ ப்ரேமை ’ யில், ஒருவர் தனது சொந்த அடையாளத்தை அரிதாகவே உணருகிறார். பல வழிகளில் மற்றவர் இந்த சரீரத்தில் வசிப்பது போல் உணர்வர். தூய ‘ப்ரேமை’யில் பல வழிகளில் இருமை குறைகிறது. ஈ.) தூய ‘ ப்ரேமை ’ யில் த்யாகம் தான் அடிப்படை. த்யாகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம்! த்யாகம் என்பது மிகப் பெரியது, ஏனென்றால் அது தனக்குப் பிடித்தமான அனைத்தையும் – ஒருவரின் சொந்த ...