ராம்கிருஷ்ணஹரி. ‘கர்மா’ என்பது இந்த ஸ்ருஷ்டியின் ஒரு பண்பாக விதிக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் எந்த செயலும் (உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ), ‘ப்ராரப்தமாக’ (திரட்டப்பட்ட கர்ம பலன்களாகி நாம் அனுபவிக்க வேண்டி உள்ளது) மாறுகிறது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் உருவாக்கும் ‘ ப்ராரப்தம் ’ என்பது இந்த பிறவியிலோ அல்லது நம் பிற பிறவிகளிலோ நாம் அனுபவிக்கப் போகும் ஒரு ஸ்டென்சில் (நகல்). ஒருமுறை வெட்டப்பட்ட இந்த ஸ்டென்சிலை மாற்ற முடியாது. நாமே அதை உருவாக்கிய கட்டிடக் கலைஞர். பகவானால் கூட அதை மாற்ற முடியாது, ஏனென்றால் அவர் அவ்வாறு செய்தால், அவர் உருவாக்கிய ஸ்ருஷ்டியின் கொள்கையை அவரே மீறுவதாகும். மேலும், அவர் அவ்வாறு செய்தால், அவர் ஒரு சார்பினருக்குப் பரிந்துரைக்கும் பாரபட்சம் பார்க்கும் குற்றத்தால் அவரையே கறைபடுத்தியதாகும். அப்படியானால், நம் வாழ்வில் ஆன்மிகத்தை நாடும்போது அதனால் என்ன பலன் என்று நாம் யோசிக்கலாம். இதன் விளைவும் ‘ ப்ராரப்தம் ’ என்ற அதே கொள்கைக்குள் செயல்படுகிறது. நாம் ஆன்மீகத்தி...