பண்ட⁴ரீஸீ ஜாவேம்ʼ ஐஸேம்ʼ மாஜே²ம்ʼ மனீம்ʼ | விடா²ஈ ஜனனீ பே⁴டே கேவ்ஹாம்ʼ ||

 

ராம்கிருஷ்ணஹரி.

 ‘கர்மா’ என்பது இந்த ஸ்ருஷ்டியின் ஒரு பண்பாக விதிக்கப்பட்டுள்ளது.  நாம் செய்யும் எந்த செயலும் (உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ), ‘ப்ராரப்தமாக’ (திரட்டப்பட்ட கர்ம பலன்களாகி நாம் அனுபவிக்க வேண்டி உள்ளது) மாறுகிறது.  அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.  நாம் உருவாக்கும் ப்ராரப்தம் என்பது இந்த பிறவியிலோ அல்லது நம் பிற பிறவிகளிலோ நாம் அனுபவிக்கப் போகும் ஒரு ஸ்டென்சில் (நகல்).  ஒருமுறை வெட்டப்பட்ட இந்த ஸ்டென்சிலை மாற்ற முடியாது.  நாமே அதை உருவாக்கிய கட்டிடக் கலைஞர்.  பகவானால் கூட அதை மாற்ற முடியாது, ஏனென்றால் அவர் அவ்வாறு செய்தால், அவர் உருவாக்கிய ஸ்ருஷ்டியின் கொள்கையை அவரே மீறுவதாகும்.  மேலும், அவர் அவ்வாறு செய்தால், அவர் ஒரு சார்பினருக்குப் பரிந்துரைக்கும் பாரபட்சம் பார்க்கும்  குற்றத்தால் அவரையே கறைபடுத்தியதாகும்.  அப்படியானால், நம் வாழ்வில் ஆன்மிகத்தை நாடும்போது அதனால் என்ன பலன் என்று நாம் யோசிக்கலாம்.  இதன் விளைவும் ப்ராரப்தம் என்ற அதே கொள்கைக்குள் செயல்படுகிறது.  நாம் ஆன்மீகத்தில் ஈடுபடும்போது, வரவிருக்கும் காலத்திற்கு ஒரு தெய்வீக ஸ்டென்சில் உருவாக்கும் செயல்களின் தொகுப்பில் ஈடுபடுகிறோம்.  நமது ஆன்மீக முயற்சி எவ்வளவு தீவிரமானதோ, அந்த அளவுக்கு நமது ஸ்டென்சில் ஒளிரும்.  நாம் பரம்பொருளுடன் இணையும்போது எந்தவொரு ஸ்டென்சிலின் உருவாக்கத்திலிருந்தும் நாம் விடுவிக்கப்படும் ஒரு நேரம் வருகிறது.

 எனவே வாழ்க்கை பல சூழ்நிலைகளை நமக்கு அளித்து அதன் மூலம் ஆன்மீகத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் மாற்றுவதற்கும் நம்மைத் தூண்டுகிறது.  சிலர் அதை விரைவில் உணர்ந்து கொள்கிறார்கள், சிலர் நாட்கள் கடந்து புரிந்துகொள்கிறார்கள். பகவானும் குருவும் பொறுமையாக அதுவரை தெய்வீக போதனைகளை நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 மேற்கூறிய செயல்கள் நடைமுறையில் இருக்கும்போது, ப்ராரப்தத்தின் விளைவுகளும் நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன.  தங்கள் வாழ்நாள் முழுவதும் தெய்வீகத்தில் ஆழமாக வேரூன்றிய பல மனிதர்களை நாம் காண்கிறோம், ஆனால் அதே நேரத்தில் நோய்கள் அல்லது பொருளாதார சிக்கல்கள் அல்லது தங்கள் குடும்பங்களில் உள்ள ப்ரச்சினைகளின் வடிவத்தில் சொல்லொணா துன்பங்களை அவர்கள் எதிர்கொள்வதை காண்கிறோம்.  அவர்கள் உண்மையில் தங்கள் ‘ப்ராரப்தத்தை’ எரித்துவிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  ஆனால் தெய்வீக வாழ்க்கையை நடத்துவதன் மூலம், அவர்கள் அதே நேரத்தில் ஒரு ப்ராரப்தத்தை உருவாக்குகிறார்கள், அது இறுதியில் அவர்களை கர்மா மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடும் ஒரு கோளத்தில் கொண்டு விடுகிறது.

 இதைச் சொல்வது எளிது.  இவ்வுலகில் போராட்டங்கள் மற்றும் ப்ரச்சனைகளை, அலைகளுக்குப் பின் அலைகளாக எதிர்கொள்ளும் போது ஒருவர் எவ்வாறு நிலையான பக்தியுடன் நிலைத்திருக்க முடியும்?  வலி என்பது வலிதான்!!!  ப்ரச்சினைகள் இருக்கும்போது அது வலியை உண்டாக்கும்.  வலியில் இருக்கும் போது, நாம் எப்படி பக்தியுடன் இருக்க முடியும் அல்லது ஆன்மீகத்தில் இருக்க முடியும்?  ‘துகா’ சொல்கிறார், துக்கப்பட வேண்டாம் துகா ம்ஹணே த்யாசே பாஹிலியா பாய.  பகவா னுடைய சரணங்களைப் பார்த்து, நான் என் கஷ்டங்களை எல்லாம் மறந்துவிட்டேன் மக³ து³க² ஜாய ஸர்வ மாஜே²ம்ʼ.  

ப்ரச்சினைகளின் தாக்கத்தைத் தவிர்க்க இன்னும் எளிமையான சூத்திரம் இருக்க முடியுமா?  ப்ரச்சினைகளை நாம் புறக்கணிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும் அவை நமது சொந்த ப்ராரப்தத்தின் விளைவாகும்.  ஆனால் இந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் அதன் தாக்கத்தை நாம் குறைக்கிறோம்.  உலகப் பிரச்சினைகளால் இங்கும் அங்கும் அலைந்து திரிந்தாலும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களை இப்போது நாம் கூர்ந்து கவனித்தால், இந்த போதனையின் விளைவே அவர்களை ஆன்மீக முயற்சியில் வலுவாக வைத்திருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

 அப்படிப்பட்ட மலையளவு போராட்டங்களைச் சந்திக்காதவர்கள் பற்றி இப்போது சிந்திப்போம்.  அவர்கள் கடந்த காலத்தின் நல்ல ‘கர்மாக்களின்’ பலனை அறுவடை செய்கிறார்கள்.  ஆகவே, அவர்கள் ஆன்மீக நோக்கங்களை இரட்டிப்பாக்கவோ அல்லது மும்மடங்காகவோ செய்யாமல், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த கர்மச் சுழலில் இருந்து விடுபட்டு, பரம்பொருளுடன் இணையும் அளவிற்கு தங்கள் முயற்சிகளை அதிவேகமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது பொருத்தமானதல்லவா?  

 மேலே நாம் குறிப்பிட்ட இந்த ‘சரணம் பற்றிய விவாதம் நம் உலக வாழ்வின் அடிப்படையில் எழுந்தது.  துகா என்ன ப்ரச்சினையை அனுபவிக்கிறார்?  அவரை துன்புறுத்தும் ‘பிராரப்தம்’எது?  அவரைப் போன்ற ஒரு பரிணாம வளர்ச்சியடைந்த ஸந்த்துக்கு, ப்ரச்சினை என்பதே வேறு !!!  தன் அன்புக்குரிய ‘வி ட்டூ’வின் தொடர்பு இல்லாமல் கழியும் எந்த நிமிடமும் அவருக்கு வலிதான்.  இது ஒரு குறுநடை போடும் குழந்தை தனது தாயிடமிருந்து பிரிக்கப்படும்போது உணரும் வலிக்கு மிகவும்ஒத்திருக்கிறது.  அது ஒருபோதும் தன் தாயின் அரவணைப்பிலிருந்து வெளியேற விரும்புவதில்லை.  ‘துகா’ நிரந்தரமாக ‘பண்டரி’ மற்றும் தனது ‘மாவுலி – வி ட்டூ’வுடன் இருக்க விருமபுகிறார் பண்டரீஸீ ஜாவேம்ʼ ஐஸேம்ʼ மாஜே²ம்ʼ மனீம்ʼ . விடா²ஈ ஜனனீ பேடே கேவ்ஹாம்ʼ .

இவ்வுலகின் வழிகளுக்கு மாறாக, ‘வி ட்டூ’வின் கூட்டுறவை இழக்கும் எந்த ஓர் உலக இன்பமும்,  உண்மையில் ஏதோ புகைமூட்டம் அவர் மீது வீசப்பட்டதைப் போல் அவரை எரித்து விடுகிறது -   ந லகே³ த்யாவிண ஸுகா²சா ஸோஹளா லாகே³ மஜ ஜ்வாளா அக்³னிசியா .  எனவே உலக  இன்பங்களின் பிடியில் இருந்து தப்பிக்க, (உலக கஷ்டங்கள் இல்லை) எல்லா முயற்சிகளையும் செய்கிறார்!  என்ன ஒரு நிலை!  ஒருமுறை எப்படியோ அவர், பண்டரிக்கு வந்து, பகவானின் சரணங்களை தரிசனம் செய்ய முடிந்ததும், அவர் முழு த்ருப்தியை அனுபவிக்கிறார் துகா ம்ஹணே த்யாசே பாஹிலியா பாய . மக³ து³க² ஜாய ஸர்வ மாஜே²ம்ʼ. நாமும் விரைவில் அது போன்ற அனுபவம் பெற வேண்டும் என்று நமது குரு மற்றும் துகாவின் பாதங்களில் பிரார்த்தனை செய்வோம்.

 ராம்கிருஷ்ணஹரி.

 

அபங்கம்.

பண்டரீஸீ ஜாவேம்ʼ ஐஸேம்ʼ மாஜே²ம்ʼ மனீம்ʼ   |

விடா²ஈ ஜனனீ பேடே கேவ்ஹாம்ʼ                           ||1||

ந லகே³ த்யாவிண ஸுகா²சா ஸோஹளா          |

லாகே³ மஜ ஜ்வாளா அக்³னிசியா                           ||2||

துகா ம்ஹணே த்யாசே பாஹிலியா பாய           |

மக³ து³க² ஜாய ஸர்வ மாஜே²ம்ʼ                              ||3||


Comments

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Abhang - The Unstoppable (An introduction)

Dhanya the samsaari | Dayaavant je antaree ||