அக²ண்ட³ துஜீ² ஜயா ப்ரீதி | மஜ தே³ த்யாஞ்சீ ஸங்க³தி

ராம்கிருஷ்ணஹரி. ‘பக்தி’ என்பது பகவானை இடைவிடாது நாம் தொடர்பு கொண்டிருப்பதாகும். தொடர்பு என்பது பகவானுடன் சம்பாஷணையை ஏற்படுத்துகிறது. இந்த தேசத்தின் அனைத்து ஸந்த்துக்களும் நமது ‘ இஷ்ட தெய்வத்தை ’ தேர்வு செய்யவும், அதனுடன் தொடர்பு மற்றும் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளனர். அந்த தெய்வம் நம் குடும்பத்தினரைப் போலவே நமக்குள் ஒன்றாகிறது. அதன் பிறகு நாம் சுதந்திரமாக நமது ‘ இஷ்ட தெய்வத்தை ’ வழிபடவும்,புகழ்ந்து நம் வசப்படுத்தவும் , விவாதம் செய்யவும் அல்லது வாதிடவும் முடிகிறது. ஸந்த்துக்கள் தங்கள் வாழ்நாளில் இந்த உறவுகளை வெளிப்படுத்தினவர்கள். ஸந்த்துக்கள் தங்கள் ப்ரேமைக்குரிய பகவானை மகிழ்வித்த இந்த உணர்ச்சிகள் அனைத்தும் அவர்களின் பாடல்களாக வடிவெடுத்தன. ஸந்த்துக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பொறுத்து, அவை பல்வேறு பிராந்திய மொழிகளில் கிடைக்கின்றன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸந்த்துக்களின் அபங்கங்கள் மராத்தி மொழியில் இவ்வாறு கிடைக்கின்றன. இன்று நாம் ரசிக்கப் போகும் அபங்கம் ‘துகா’விடம் இருந்த...