அக²ண்ட³ துஜீ² ஜயா ப்ரீதி | மஜ தே³ த்யாஞ்சீ ஸங்க³தி

 

ராம்கிருஷ்ணஹரி.

‘பக்தி’ என்பது பகவானை இடைவிடாது நாம் தொடர்பு கொண்டிருப்பதாகும்.  தொடர்பு என்பது பகவானுடன் சம்பாஷணையை ஏற்படுத்துகிறது.  இந்த தேசத்தின் அனைத்து ஸந்த்துக்களும் நமது இஷ்ட தெய்வத்தை தேர்வு செய்யவும், அதனுடன் தொடர்பு மற்றும் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளனர்.  அந்த தெய்வம்  நம் குடும்பத்தினரைப் போலவே நமக்குள் ஒன்றாகிறது.  அதன் பிறகு நாம் சுதந்திரமாக நமது இஷ்ட தெய்வத்தை வழிபடவும்,புகழ்ந்து நம் வசப்படுத்தவும் , விவாதம் செய்யவும் அல்லது வாதிடவும் முடிகிறது.  ஸந்த்துக்கள் தங்கள் வாழ்நாளில் இந்த உறவுகளை வெளிப்படுத்தினவர்கள்.  ஸந்த்துக்கள் தங்கள் ப்ரேமைக்குரிய பகவானை  மகிழ்வித்த இந்த உணர்ச்சிகள் அனைத்தும் அவர்களின் பாடல்களாக வடிவெடுத்தன. ஸந்த்துக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பொறுத்து, அவை பல்வேறு பிராந்திய மொழிகளில் கிடைக்கின்றன.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸந்த்துக்களின் அபங்கங்கள் மராத்தி மொழியில் இவ்வாறு கிடைக்கின்றன.  இன்று நாம் ரசிக்கப் போகும் அபங்கம் ‘துகா’விடம் இருந்து வழிந்த அமிர்தத்தின் ஒரு முத்து.

அக²ண்ட³ துஜீ² ஜயா ப்ரீதி . மஜ தே³ த்யாஞ்சீ ஸங்க³தி . மக³ மீ கமளாபதி . துஜ நானீம்ʼ காண்டாளா …1

“ஓ விட்டலா!  எப்பொழுதும் உன்மீது ப்ரேமை வைத்திருப்பவர்களின் தோழமையை எனக்குக் கொடு.  மற்றொரு விளக்கம் நீ யார்மீது ப்ரேமையை நிரந்தரமாக வைத்திருக்கிறாயோ அவர்களின் தோழமையை எனக்குக் கொடு!!!.  அந்த ஸந்த்துக்களும் அவர்களின் சங்கமும் விலைமதிப்பற்றது என்பதை நான் அறிவேன், அதனால்தான் அவர்களை உன் இதயத்திற்கு மிக நெருக்கமாக வைத்திருக்கிறாய்.  நீ நிச்சயமாக அதை கைவிட விரும்ப மாட்டாய்.  ஆனால் சரி விட்டோபா!  நான் உனக்கு ஏற்படுத்தும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நீ விடுபட விரும்பினால், நீ எனக்கு ஸந்த்துக்களின் சகவாசத்தை அளித்தால், நான் ஒருபோதும் உன்னிடம் வந்து  தொந்தரவு செய்ய மாட்டேன் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன் !!!  இந்த தீர்வைத் தேர்ந்தெடுப்பது இப்போது  உன் கையிலுள்ளது.

படோ³ன ராஹேன தே டா²யீம்ʼ . உகா³ சி ஸந்தாஞ்சியே பாயீம்ʼ . ந மகே³ம்ʼ ந கரீம்ʼ காம்ʼஹீம்ʼ . துஜீ² ஆண விடோ²பா³ ..த்ரு... 

 (விட்டோபா மௌனமாக இருப்பதாகவும், துகாவின் வேண்டுகோளுக்கு இணங்காதது போலவும் தெரிகிறது. எனவே துகா தொடர்கிறார்..) 

 உன் பாரமாக ஏற்றுக் கொண்டிருக்கும் என்னை, உன் தோளில் இருந்து ஸந்த்துக்களின் தோள்களுக்கு மாற்றக்கூடாது என்று நீ நினைக்கலாம்,  விட்டோபா.  அநாவசியமாக அவர்களிடம் சென்று இது, அது என்று கேட்டு நான் தொல்லை கொடுக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.  நான் அமைதியாக அவர்களுக்கு சேவை செய்து  அவர்களின் காலடியில் தஞ்சம் அடைவேன்.  இதை நான் கடைபிடிப்பேன் என்று ‘விட்டோபா’ உன் மீது சத்தியம் செய்கிறேன்.

தும்ஹீ ஆம்ஹீ பீடோ³ம்ʼ ஜ்யானேம்ʼ . தோ³ன்ஹீ வாரதீ ஏகானேம்ʼ . பை³ஸலோம்ʼரணேம்ʼ . ஹாகா தே³த தா³ரேஶீம்ʼ ..2.. 

 (இப்போது கூட விட்டோபா மனம் இரங்காமல் இருப்பது போல் தெரிகிறது. துகா இப்போது விட்டோபாவை கண்டித்து சொல்கிறார்...)

 உனக்கு ஏன் புரியவில்லை?  நாம் இருவரும் நீண்ட காலமாக  நமக்குள்ள பிரச்சினைகளை  தீர்க்க முயற்சித்து  வருகிறோம் என்பது பெரிய ரகசியம் அல்ல.  என்னுடைய கஷ்டம் என்னவென்றால், இந்த உலகத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை என்பதும், உன் கஷ்டம் என்னவென்றால், நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னை விடுவிக்க முடியவில்லை என்பதும் ஆகும்.  நாம் இருவரும் இந்த வலிகளில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்.  இந்த ஸந்த்துக்கள் சங்கத்தில் நான் இந்த உலகத்தின் பிடியில் இருந்து என்னை விடுவிக்க கற்றுக்கொள்வேன், மேலும் என்னை கரையேற்றும் உன் விருப்பமும் இந்த ஸந்த்துக்களின் க்ருபையால் நடக்கும்.  நானே இம்முயற்சியை எடுக்கும்போது, ​​உனக்கு இதில் என்ன கஷ்டம்?  நீ ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறாய், முன்வரவில்லை?  எனவே, உன் நலனுக்காக, தர்ணாவில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.  நான் உன் வாசலில் இருந்து கொண்டு, தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறேன்.  நீ மனம் இரங்க வேண்டும் !!  இதிலிருந்து விடுபட உனக்கு வேறு வழியில்லை என்று  தெரிந்து கொள்!!!

துகா ம்ஹணே யா போ³லா . சித்த த்³யாவேம்ʼ பா³ விட்²ட²லா . ந பாஹிஜே கேலா . அவகா மாஜா² ஆவ்ஹேர ..3..

 (விட்டோபா இன்னும் அசையவில்லை. ‘துகா’ மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கிறார் ...)

 ‘ஓ பாண்டுரங்கா!’ என்னுடைய இந்த வார்த்தைகள் உனக்கு ஒன்றும் புரியவில்லையா?  தயவு செய்து !  தயவு செய்து !  தயவு செய்து !  என்னுடைய இந்த புலம்பல்களுக்கு உன் கவனத்தை செலுத்து.  உன் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.  நீ என்னை புறக்கணிக்கிறாய்.

 அபங்கம் இங்கே முடிகிறது.  இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும்?  ‘விட்டோபா’ ஏன் மனம் இரங்கவில்லை?  இந்தக் கேள்விகளுக்கான ஒரே பதில் என்னவென்றால், இந்த உன்னத உணர்ச்சியின் கீழ், துகாவிடமிருந்து வெளிப்படும் அபங்கங்கள் அற்புதமாக இருக்கும் என்று  விட்டோபா இந்த பாவங்களை  வெளிப்பட அனுமதித்திருப்பார்.  ஒரு கட்டத்தில் ‘வித்து’ நிச்சயமாக ‘துகாவின் வார்த்தைகளை ஏற்று அவரது விருப்பத்தை நிறைவேற்றியிருப்பார்.

  ராம்கிருஷ்ணஹரி.

அபங்கம்

 அக²ண்ட³ துஜீ² ஜயா ப்ரீதி                                          |

மஜ தே³ த்யாஞ்சீ ஸங்க³தி                                          |

மக³ மீ கமளாபதி                                                            |

துஜ நானீம்ʼ காண்டாளா                                             ||1||

படோ³ன ராஹேன தே டா²யீம்ʼ                                 |

உகா³ சி ஸந்தாஞ்சியே பாயீம்ʼ                                |

ந மகே³ம்ʼ ந கரீம்ʼ காம்ʼஹீம்ʼ                         |

துஜீ² ஆண விடோ²பா³                                      ||த்ரு||

தும்ஹீ ஆம்ஹீ பீடோ³ம்ʼ ஜ்யானேம்ʼ                       |

தோ³ன்ஹீ வாரதீ ஏகானேம்ʼ                          |

பை³ஸலோம்ʼ தரணேம்ʼ                                             |

ஹாகா தே³த தா³ரேஶீம்ʼ                                              ||2||

துகா ம்ஹணே யா போ³லா                                       |

சித்த த்³யாவேம்ʼ பா³ விட்²ட²லா                              |

ந பாஹிஜே கேலா                                                          |
அவகா
மாஜா² ஆவ்ஹேர                                          ||3||


Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram 

Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar    

Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai      

Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru     

Co-ordinator: V R Radhakrishnan, Chennai

Comments

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya