அபங்கங்கள் - மடை திறந்த வெள்ளம் (ஒரு முன்னுரை)

       ஜகத்குரு துகாராம் மஹராஜ், மஹாராஷ்டிராவின் போற்றுதலுக்குரிய ஸந்த் துக்களில் ஒருவர் ஆவார். அவர் விட்டலனின் மீது 60 கோடி அபங்கங்களுக்கு மேல் பாடியுள்ளார்.  


இந்த அபங்கங்களின் ஆத்மார்த்தமான ' பாவ ‘ங்களால்  இவை '

வைஷ்ணவ வேதா ' என போற்றிக் கொண்டாடப்படுகிறது.

          மஹாத்மா   ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ( ஸ்ரீ அண்ணா ),  அவரது   ‘உதார குணவந்தா ' என்னும் அபங்கத்தில் ஸந்த் துகாராம்  போன்ற குரு எங்குமே இல்லை, அவரை நாம் குருவாக அடைந்தது இந்த சம்ஸாரத்தில் நமது துக்கங்களை விரட்டியடிக்கிறது என போற்றுகிறார்.


ப்ரேமா ம்ஹணே ஸம்ʼஸார சிந்தா நாஹீ :

துகாராம ஸாரிகா² ஸத்³கு³ரு நாஹீ ::

- ஶ்ரீ க்ருʼஷ்ணப்ரேமீ மஹாராஜ (ஶ்ரீ அண்ணா)


ஸந்த் துகாராம் அபங்கங்கள் மராத்தியில் இயற்றப்பட்டு இந்த பாரத தேசம் முழுவதும் நாமசங்கீர்த்தனமாக ஒலித்துக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்தவை.  இப்படிப்பட்ட பொக்கிஷமான அவரது அபங்கங்களில்  17 ஆம் நூற்றாண்டில் ( ஏறக்குறைய 400ஆண்டுகளுக்கு முன்பு) இயற்றப்பட்ட சில அபங்கங்களே நம் கைக்கு இன்று கிடைத்துள்ளன.


   மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ( ஸ்ரீ அண்ணா )அவர்களின் ஆசியுடன் இந்த வலைப் (' ப்ளாக்’ )பதிவு மஹாராஷ்டிராவின் பண்டைய பக்தி மார்க்கத்தைப் பாதுகாத்து மேலே எடுத்துச்செல்லும் ஒரு சிறிய முயற்சி.

       இந்த பதிவுகள் மூலம், ஜகத்குரு துகாராம் மஹராஜின் போற்றுதலுக்குரிய அபங்கங்களை , மராத்தி தெரியாத எல்லோரிடையேயும் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

     தொடக்கமாக சில குறிப்பிட்ட துகாராமின் அபங்கங்களின்  சரணங்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இந்த இரு மொழிகளிலும்  ' பாவார்த்தங்கள்’ ( சாராம்ஸம்)  பதிவிடப்படும். இந்த சரணங்கள், ' ஸ்ரீ புண்டலீக மஹராஜ் தேஹுகர்’ ( ஜகத் குரு துகாராம் மஹராஜின் வம்ஸத்தில் வந்தவர்)அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


இவற்றின் பாவார்த்தங்கள் , மும்பை ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பாகவதர் அவர்களால் கருத்தாழத்துடன், அதே சமயம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன.



   நாள் தோறும் ஒரு ' பாவார்த்தம்’, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பதிவிடப்படும். இதைப் படிப்பவர்கள் பயன்பெற்று ஏராளமான பக்தர்களுக்குப் பரவச் செய்து இவற்றின் மஹிமையை உலகறியச் செய்வர் என்பது திண்ணம்.

எல்லோரும் இந்த பயணத்தில் இணைய‌வேண்டுகிறோம்.

ராம்கிருஷ்ணஹரி.



Editor: Smt Poornima Srikanth, Tripunithura, Smt. Vishaka Srinivasan, Mumbai
Tamil translation: Smt Vasantha Srinivasan, Bengaluru, 
Co-ordinator: V R Radhakrishnan, Chennai  




 

Comments

Post a Comment

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya