உடா² ஜாகே³ம்ʼ வஹா ரே ஆதாம்ʼ | ஸ்மரண கரா பண்ட⁴ரீநாதா² ||

 

ராம்கிருஷ்ணஹரி.

 நமது அன்றாட வாழ்க்கை ஓர் ‘அடைப்புக்குறி’ போன்றது.  ஒரு ( இது நாம் உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் நமது நாள் தொடங்குவதைக் குறிக்கிறது. மேலும் ) உறங்கப் போகும் நமது நாள் முடிவடைவதைக் குறிப்பதும் உள்ளது.  ( & ) க்கு இடையில் என்ன நடக்கிறது என்பதை நாம் வாழ்க்கை என்று அழைக்கிறோம்.  இதை சற்று விரிவாக பார்ப்போம்.

  ( இல்லாவிட்டால், இது- ) இருக்காது. அதாவது , நாம் எழுந்திருக்கவில்லை என்றால், தூக்கம் இல்லை.

-    எழுந்திருப்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருகிறது.  தூக்கம் என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருகிறது .

-    எனவே விழித்தெழுவது அதனுடன் நினைவைக் கொண்டுவருகிறது.

-    உலக வாழ்க்கையில் விழிப்பு எப்போதும் ஒளியுடன் தொடர்புடையது.  தூக்கம் இருளுடன் தொடர்புடையது.

-    ஆன்மிகத்தில், விழித்திருப்பது என்பது ஆத்மாவை உணர்வது,அதாவது ‘ஞானம்’ என்று பொருள்படும். எவர் ஆத்மாவை உணரவில்லையோ அவர் தூக்கத்தில் இருக்கிறார், இது அக்ஞானம் என்று பொருள்படும்.

-    உலக வாழ்க்கையில், விழிப்பு மற்றும் உறக்கம் இரண்டும் மிகவும் அவசியமான நிலையில், ஒன்றுக்கொன்று மாறி மாறி வர வேண்டும், ஆத்மாவை உணரும்போது, நாம் விழித்தெழுந்து, மீண்டும் ஒருபோதும் உறங்கும் நிலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும்.  உண்மையில் இதுவே மனித வாழ்வில்  விரும்பப்படுகிறது.

-    உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, அவரை/அவளை எழுப்புவதற்கு, பெரும்பாலும் வேறொருவர் அல்லது அலாரம் போன்ற வேறு ஏதாவது தேவை.  தானாகவே எழுந்திருக்கக்கூடியவர்கள் வெகு சிலரே.  ஆன்மிக உலகிலும் நம்மை எழுப்புவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்.  அந்த ஒருவர்தான் நமது ‘ஸத்குரு’.

 ஸந்த் நாம்தேவ் மஹராஜின் இந்த அபங்கம், பகவானை எழுப்பும் காகட ஹாரத்தியின் ஒரு பகுதியாகப் பாடப்படும் போது, ​​கண்ணோட்டத்திலும் ஸாராம்ஸத்திலும் நம்மை எழுப்புவதாகும்.  இந்த தேசத்தின் அனைத்து ஆன்மீகப் பெரியவர்களும் செதுக்கிய ஆன்மீக அறிவை நமக்குத் தூண்டும் ஒரு மிகப் பெரிய பத்ததி (அமைப்பு) இது.  இந்த அறிவு நம்மை அறியாமலேயே நமக்குள் புகுத்தப்படுகிறது.  ஸந்த் நாம்தேவ் கூறுகிறார்:

 

உடா² ஜாகே³ம்ʼ வஹா ரே ஆதாம்ʼ  - இப்போதே எழுந்திரு !  என் அன்பே எழுந்திரு!

 ஸ்மரண கரா பண்டரீநாதா² - ‘ஸ்ரீ பண்டரிநாத்’ பற்றி சிந்தனை செய்!

பாவேம்ʼ சரணீம்ʼ டே²வா மாதா² -  ப்ரேமையுடன், உன் நெற்றியை அவர் சரணங்களில் வை.

சுகவா வ்யதா² ஜன்மாச்யா  - மீண்டும் பிறக்கும் கஷ்டத்தில் இருந்து, தப்பித்துக் கொள்..

   

 இந்த அபங்கத்தின் இதர பகுதிகளையும் நாம் பார்க்காவிட்டால் அது நியாயமற்றது.

ன தா³ரா புத்ர ஜன செல்வம், மனைவி, குழந்தைகள்

 ப³ந்து ஸோயரே பிஶூன   - சகோதரர்கள், உறவினர்கள், பயனாளிகள், புறம் கூறுபவர்கள்,

ஸர்வ மித்²யா ஹே ஜாணூன அனைத்தும் வெறும் மாயை.

ஶரண ரிகா தே³வாஸீ பகவானிடம் சரணடைந்து விடு.

 மாயா விக்னேம்ʼ ப்ரமலா க²ரேம்ʼ- ‘மாயை’யின் அலைக்கழிப்பால், ப்ரச்னைகள் இவ்வாறு உண்மை போல் தோன்றுகின்றன.

 ம்ஹணதாம்ʼ மீ மாஜே²னி கரேம்ʼ - நாம், ‘நான்’, ‘என் சொந்த வீடு’ போன்றவற்றைச் சொல்கிறோம்.

ஹேம்ʼ தோம்ʼ ஸம்பத்தீசேம்ʼ வாரேம்ʼ- இந்த செல்வங்கள் அழியக் கூடியவை.

ஸாசோகாரேம்ʼ ஜாஈல தங்களை உண்மையாக நிலைநிறுத்திக் கொள்பவை.

 ஆயுஷ்ய ஜாத பாஹே பாஹா பார் !  உன் வாழ்க்கை  உன்னைவிட வேகமாகக் கடந்து செல்கிறது!

காள ஜபதஸே மஹா  - காலம்  எல்லாவற்றையும் பயங்கரமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது !

 ஸ்வஹிதாசா கோர வஹா -  உன் நன்மைக்காக 

 ஏதாவது செய்ய ஆர்வமாக இரு.

 த்யானீம்ʼ ரஹா ஶ்ரீஹரிச்யா  - ‘ஸ்ரீ ஹரியின்’ சரண தியானத்தில் இரு.

ஸந்தசரணீம்ʼ பாவ தரா   - ஸந்த்துக்களின் சரணங்களில் உறுதியான பக்தியை வைத்திரு.

 க்ஷணக்ஷணா நாம ஸ்மரா ஒவ்வொரு க்ஷணமும் (பகவானுடைய) நாமத்தை நினைத்துக் கொண்டிரு.

  முக்தி ஸாயுஜ்யதா வரா- ‘முக்தி’ மற்றும் ‘ஸாயுஜ்யம்’ (உலக வாழ்க்கையிலிருந்து விடுபடுதல்) இவற்றை விரும்பு.

ஹேஞ்சி கரா பா³பாம்ʼநோ  - இதை மட்டும் செய்யுங்கள் என் அன்பர்களே !

விஷ்ணுதா³ஸ வினவீ நாமா ஸ்ரீ விஷ்ணுவின்’ சேவகனான  ‘நாமதேவனான’ நான் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

 புலூ நகா பவகாமா  - இந்த உலகக் கடமைகளை நீங்கள் செய்யும்போது

நீங்கள் அதில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராம்ʼ அந்தரீம்ʼ நிஜப்ரேமா உண்மையான ப்ரேமையை உங்கள் இதயங்களில் வைத்திருங்கள்.

ந சுகா நேமா ஹரிபக்தீ  - ‘ஸ்ரீ ஹரி’ பக்தியை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.

 

ராம்கிருஷ்ணஹரி.

அபங்கம்.

 உடா² ஜாகே³ம்ʼ வஹா ரே ஆதாம்ʼ                                      l

ஸ்மரண கரா பண்டரீநாதா²                                                

பாவேம்ʼ சரணீம்ʼ டே²வா மாதா²                                          l

சுகவா வ்யதா² ஜன்மாச்யா                                                    l1l 

ன தா³ரா புத்ர ஜன                                                                l

ப³ந்து ஸோயரே பிஶூன                                                       l

ஸர்வ மித்²யா ஹே ஜாணூன                                                  l

ஶரண ரிகா தே³வாஸீ                                                             llத்ருʼll 

மாயா விக்னேம்ʼ ப்ரமலா க²ரேம்ʼ                                     l

ம்ஹணதாம்ʼ மீ மாஜே²னி கரேம்ʼ                                       l

ஹேம்ʼ தோம்ʼ ஸம்பத்தீசேம்ʼ வாரேம்ʼ                               l

ஸாசோகாரேம்ʼ ஜாஈல                                                            ll2ll

ஆயுஷ்ய ஜாத பாஹே பாஹா                                               l

காள ஜபதஸே மஹா                                                                

ஸ்வஹிதாசா கோர வஹா                                                   l

த்யானீம்ʼ ரஹா ஶ்ரீஹரிச்யா                                                 ll4ll

ஸந்தசரணீம்ʼ பாவ தரா                                                        l

க்ஷணக்ஷணா நாம ஸ்மரா                                                    

முக்தி ஸாயுஜ்யதா வரா                                                          l

ஹேஞ்சி கரா பா³பாம்ʼநோ                                                    ll 5ll 

விஷ்ணுதா³ஸ வினவீ நாமா                                                  l

புலூ நகா பவகாமா                                                                

ராம்ʼ அந்தரீம்ʼ நிஜப்ரேமா                                                 l

ந சுகா நேமா ஹரிபக்தீ                                                          ll 6ll

Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram

Bhaavaartham: Mumbai Sri Srinivasa Bhagavatar 

Editor: Smt Poornima Srikanth, Tripunithura, Smt. Vishaka Srinivasan, Mumbai

Tamil translation: Smt Vasantha Srinivasan, Bengaluru 

Co-ordinator: V R Radhakrishnan, Chennai

Comments

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya