துகா ம்ஹணே வாடே . நகோ பு²டோம்ʼ தே³ஊம்ʼ பா²ண்டே .

 

ராம்கிருஷ்ணஹரி.

ஒரு செல்வத்தை ஈட்டுவதற்கு பெரும் முயற்சி எடுக்கும் போது, ​​அதைப் பாதுகாப்பதற்கும் இன்னும் அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.  அது நன்றாகப் பாதுகாக்கப்படாவிட்டால், நம் முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போவது மட்டுமல்லாமல், அந்த அதிர்ஷ்டத்தை மீண்டும் மீண்டும், மிக விரைவில் சம்பாதிக்க முடியுமா என்பதும் நிச்சயமாக கூறமுடியாது.  இது வரை, துகாவின் அபங்கங்களில் இருந்து வெளிப்படும் எண்ணற்ற ‘துகாவின் ‘பாவங்களின்’ கதிர்களை அனுபவிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.  இந்த அபங்கங்கள் துகா இருக்கும் நிலையை வெளிப்படுத்துகிறது.  அவர் அமானுஷ்யமான ஒரு கோளத்தில் இருந்தார்.  அவருடைய ‘பாவம்’ எப்பொழுதும் எந்தக் குறையும் இல்லாமல் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருந்தது.  எனவே அவர் அதைப் பாதுகாக்க விரும்ப மாட்டாரா?  அவர் அதை விரும்பினார், இங்கே அவர் தனது அன்பான ‘விட்டலா’வின் முன் அதை பிரார்த்தனையாக வைக்கிறார்.  ‘துகா’வுக்கும் ‘வி ட்டூ ’வுக்கும் இடையிலான கற்பனை உரையாடலின் வடிவில் இந்த அபங்கத்தை ரசிப்போம்.

 விட்டலன்: ‘துகா’, என் பெயரைச் சொன்னாயா?  அதுதான் உன்னிடம் ஓடி வந்தேன்.

 துகா : ஆமாம் ‘வி ட்டூ ’ !  நான் உன் பெயரை எவ்வளவு அதிகமாக அழைக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக பாவங்கள் என்னுள் பாயும்.

 வி ட்டூ : ‘பாவங்கள்’ ?  அவை என்ன துகா?

 துகா : வேறென்ன ?  உன்னை மையமாக வைத்திருக்கும் எண்ணங்கள்.

 வி ட்டூ : நானா?  இத்தனை ‘பாவங்கள்’ உனக்குள் பெருக என்னுள் என்ன இருக்கிறது?

துகா : வி ட்டூ !  சொல்!  இப்போது ஏன் என்னிடம் பேசுகிறாய்?  இப்போது என்னிடம் பேசுவதில் என்னுள் என்ன இருக்கிறது?

 வி ட்டூ: சிரித்து...  யாரிடமும் என் மனதுக்கு பிடித்தபடி பேச முடியாது.  உன் ‘ப்ரேமை’ என்னைப் பேச வைத்து திருப்திப்படுத்துகிறது.

துகா: ஹ்ம்ம்  ... நீ பார்க்கிறாயா?  நீ குறிப்பிடும் அந்த ‘ப்ரேமை’ என்பது என்ன?

 வி ட்டூ: உன் ‘பக்தி’ கலந்த எண்ணங்கள் ‘துகா’.

 துகா: ஆமாம், அதுதான்!  அதைத்தான் ‘பாவங்கள்’ என்பார்கள்.

 வி ட்டூ : ஓ !  அதனால் உன் ‘ப்ரேமை’ தான் ‘பாவா’.  எனக்குப் புரிகிறது.  உனக்குத் தெரியுமா, அது என்னை உன்னிடம் இழுக்கிறது.

 துகா : ஆமாம் வி ட்டூ !  இந்த ‘பாவம்’தான் உன்னிடம் எல்லோரையும் ஈர்க்கிறது என்பதை இப்போது நீ ஒப்புக்கொள்வாய்.

 வி ட்டூ : அப்படியா ?

 துகா: அப்படிதான். அதனால் நான் இந்த பாவங்களை என் இதயத்திற்குப் பிடித்ததாக வைத்துக் கொள்ள  மாட்டேனா?  அது இல்லாமல் என்னால் உன்னை அடையமுடியாது!!  இந்த ‘பாவங்கள்’ அலை அலையாக வரும்.  ஆனால் நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்.

 வி ட்டூ : ‘துகா,’ இந்த பாவங்கள் அனைத்தும் முழுவதுமாக உன்னுடையது, ஏனென்றால் அவை உனக்குள் இருந்து வந்தவை.  நீ என்னிடம் ஏதாவது கேட்க விரும்பினால் நான் உனக்கு அதிலிருந்து என்ன செய்ய முடியும்?

 துகா : வி ட்டூ’, இந்த பாவங்கள் வெறும் எடுத்துச் செல்லும் சாதனங்கள் அல்லது வாகனங்கள்.  கொடுக்கப்படும் எதையும் சுமந்து செல்பவை.  இந்த பாவங்கள், பொருள்கள், ஆன்மீக பாடங்கள், தத்துவ பாடங்கள் மற்றும் முடிவில்லாத பட்டியல்களை சுமந்து செல்லக் கூடியவை.  ஆனால்  அவை உன்னைத்தான் முக்கியமாக கொண்டு செல்லக்கூடியவை என்பதையும் நான் அறிவேன்.

 வி ட்டூ: சரி.  எனவே நீ விரும்பியதை எடுத்துச் செல் !!  அது உன் விருப்பம்!!  இதில் எனக்கு என்ன இருக்கிறது?

 துகா : வி ட்டூ !  அப்படி பேசாதே!  உன்னையோ அல்லது என் குருவையோ என் ‘பாவங்கள்’ முக்கியமாக கொண்டு செல்வது என் விருப்பமாக இருக்க முடியாது.

 வி ட்டூ : அப்படியானால் உனக்கு அந்த ‘பாவங்களை’ யார் வழங்குவர்?

 துகா: உனக்குத் தெரியாதா?  ஆனால் உன் கேள்விக்கு மதிப்பளிக்க மட்டுமே நான் பதிலளிக்கிறேன்.  உன்னையோ அல்லது எனது குருவையோ அந்த பாவங்களின் மீது வைப்பது முற்றிலும் உன் கட்டுப்பாட்டில் உள்ளது.

வி ட்டூ: சிரித்துக்கொண்டே... எப்படி சொல்கிறாய்?

 துகா: கண்கள் பார்ப்பது, காதுகள் கேட்பது, மூக்கின் வாசனை, நாக்கு சுவை மற்றும் தோலை தொடும் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மனம் எண்ணங்களையும் ‘பாவங்’களையும் உருவாக்குகிறது.  இவற்றில் எதுவுமே உன்னைப் பிடிக்க முடியாது.  நீ ஒப்புக்கொள்கிறாயா?

 வி ட்டூ : ஆமாம்.  நான் ஒப்புக்கொள்கிறேன்.  இவை அனைத்தையும் தாண்டியவன் நான்!!

 துகா : அப்புறம் சொல்லு வி ட்டூ?  என் ‘பாவங்கள்’ உனக்கு  ஏன் பிடித்தது?

 வி ட்டூ : மௌனம்... புன்னகை... நான் இப்போது உன் கேள்விக்கும் பதிலுக்கும் மதிப்பளிக்கிறேன்.  நான் என்னை உனக்குக் கொடுத்தேன்.

 துகா: அதனால்தான் நான் சொன்னேன், என்னுடைய ‘பாவங்களில்’ குருவோ நீயோ இருந்தால், நீங்கள் இருவரும்தான் அதில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தீர்கள்.

 விது : துகா !  நீ வெற்றி பெற்றாய்  !  என்னிடமிருந்து ஒரு வரத்தைக் கேள்.

 துகா: உன்னைப் பெற்ற பிறகு, ஒருவன் கேட்கும் வரம் இல்லை என்று முற்காலத்து மகான்கள் எமக்குக் கற்பித்தார்கள்.  ஏனென்றால், உன்னைப் பெற்ற பிறகு, எல்லாம் முழுமையடைகிறது.  ஆசைப்படுவதற்கு எதுவும் இல்லை.  ஆனால் நான் அவர்களைப் போல் இல்லை.  நான் இன்னும் 3 விஷயங்களை உன்னிடம் கேட்க விரும்புகிறேன்.  அதிர்ஷ்டவசமாக, நீயே அதற்கு வழி வகுத்திருக்கிறாய்.

வி ட்டூ :  மேலே சொல், ‘துகா’, உன் விருப்பம் எதுவாக இருந்தாலும் எனக்கு அது ஒரு கட்டளை.  நான் அதை நிறைவேற்றுவேன்.

 துகா : ஆலேம்ʼ பாகா³ தேம்ʼ கரிதோம்ʼ !  என் முகத்தில் ஒரு மாறுதல் கூட இல்லாமல் விதி எனக்கு வழங்கிய அனைத்தையும் நான் தழுவினேன் என்பதை நீ அறிவாய்.  நான் அதை வெறுத்ததில்லை.  எனது திறமைக்கு ஏற்றவாறு செயல்படுகிறேன்.  அதே சமயம், உன் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் இவை அனைத்தையும் செய்ய நான் கற்றுக்கொண்டேன்- துஜே²ம்ʼ நாம உச்சாரிதோம்ʼ! அந்த வகையில் நான் எனது பொறுப்புகளில் இருந்து ஓடவில்லை, அதே சமயம் உன்னுடன் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.  நான் உன்னை உணராமல் இருக்கலாம் ஆனால் உன் பெயரை மட்டும் உச்சரிக்கிறேன்.

 வி ட்டூ : ஓ துகா !  நீ என் பெயரை உச்சரிப்பதால் தான், என் மதிப்பு தெரியாவிட்டாலும், உன் எண்ணங்களில் என்னை வைத்து என் மதிப்பை உனக்குத் தெரியப்படுத்த முடிவு செய்தேன்.  உன் ‘பாவங்களில்’ நான் ஏன் & எப்படி நுழைந்தேன் என்று இப்போது உனக்குத் தெரியும் !!!  யார் என்னை அழைத்தாலும், நான் அவர்களிடம் ஓடுகிறேன்!

 துகா : பகவானே! அது பெரிய பாக்கியம் இல்லையா ?  இப்போது தயவுசெய்து எனக்கு ஒரு க்ருபை செய்.  இதுவே நான் உன்னிடம் தேடும் முதல் வரம்.  ஆதாம்ʼ மாஜ்²யா பாவா . அந்தராய நகோ தே³வா ...  இந்த ‘பாவம்’ ஒரு தொடர்ச்சியான  அறுக்கப்படாத சரமாக இருக்கட்டும்.  உன்னைத்தவிர வேறு எந்த சிந்தனையும் ஆக்கிரமித்துள்ள இரண்டு பாவங்களுக்கு இடையில்  இருக்கக்கூடாது.

 வி ட்டூ : ‘துகா’ தந்தேன்.  நீ தேடும் 2வது வரம் என்ன?

துகா :த்³ருʼட மாஜே²ம்ʼ மன என் மனம்  உறுதியாக இருக்க வேண்டும்.  உன்னைச் சந்திக்கும் வரை அது அலைந்த அலைச்சல்கள் போதும்.  தயவு செய்து இனிமேல்  மனதை இந்த ‘பாவங்களுடன்’ மட்டும் இணைக்கவும்-  யேதே²ம்ʼ ராகா²வேம்ʼ பா³ந்தோ . ‘பாவங்கள்’ என்ற கோவில் கட்டிக்கொண்டு, அது அலைந்து திரிந்தாலும், அது உன்னை மட்டுமே சுற்றித் திரியும்.

வி ட்டூ: கண் சிமிட்டி... ‘துகா’ என்கிறார்.  நீ  எதை விதைக்கிறாயோ  அதை அறுவடை செய்வாய்!!!  (உன் பக்தியால்) என்னைக் கட்டிப் போட்டாய்,  உன் மனதை (என்னிடம்) இருத்திக் கொண்டு அந்த வரத்தை நான் தருகிறேன்.  இன்னும் கேட்க வேண்டியது என்ன?  நீ வேண்டும் மூன்றாவது வரம் என்ன?

துகா : வி ட்டூ !  நான் எப்போதும் நேர் வழியில் செல்ல வேண்டும்.  என் உள்ளத்தில் எந்த வக்கிரமும் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால் நான் வழிதவறி விடுவேன்-  துகா ம்ஹணே வாடே . நகோ பு²டோம்ʼ தே³ஊம்ʼ பா²ண்டே .

‘வி ட்டூ’ ‘துகா’விடம் மிகவும் மகிழ்ச்சியடைந்து, முன்பை விட அதிகமாக தனது ‘பாவங்களை ’ நிரப்புகிறார்.

அப்போதுதான் ‘துகா கண்களைத் திறந்தார்.  அவர் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்.  சூரியனின் மென்மையான கதிர்கள் சுற்றியுள்ள அனைத்தையும் ஒளிரச் செய்துகொண்டிருந்தன.  ஒரு மெல்லிய தென்றல் தன் வழியில் வந்த அனைத்தையும் தழுவிக்கொண்டு வீசியது.  அருகிலேயே மகிழ்ச்சியுடன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.  ஏராளமான பறவைகள் அங்கு சத்தமிட்டுப் பறந்து கொண்டிருந்தன. நடனமாடும் பூக்களுக்கு நடுவே தேனீக்கள் ஆரவாரமாக ஒரு ராகத்தை முனகிக் கொண்டிருந்தன.  ‘விட்டல்’ எங்கும் எல்லாவற்றிலும் ஜொலித்தார்.  துகா தனது இதயத்துள் தனது  விபாவட்டூ’வுடன் இன்னுமொரு பாவபூர்ணமான பயணத்தை மேற்கொண்டதையும், இந்த பாவம் இப்போது துகா வின் அனுபவத்திற்காக விட்டலன் அவரைச் சுற்றி  இயற்கையில் ஓர் அன்னையின் வடிவில் மற்றொரு பாவத்தை கற்பித்ததையும் உணர்ந்தார்.

 ராம்கிருஷ்ணஹரி.

அபங்கம்.

 

ஆதாம்ʼ மாஜ்²யா பாவா . அந்தராய நகோ தே³வா ..1..

ஆலேம்ʼ பாகா³ தேம்ʼ கரிதோம்ʼ . துஜே²ம்ʼ நாம உச்சாரிதோம்ʼ ..த்ரு...

த்³ருʼட மாஜே²ம்ʼ மன . யேதே²ம்ʼ ராகா²வேம்ʼ பா³ந்தோன ..2..

துகா ம்ஹணே வாடே . நகோ பு²டோம்ʼ தே³ஊம்ʼ பா²ண்டே ..3..

 

 

Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram

Bhaavaartham: Mumbai Sri Srinivasa Bhagavatar 

Editor: Smt Poornima Srikanth, Tripunithura, Smt. Vishaka Srinivasan, Mumbai

Tamil translation: Smt Vasantha Srinivasan, Bengaluru 

Co-ordinator: V R Radhakrishnan, Chennai 

Comments

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya